நாடு முழுவதும் சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை 2029ம் ஆண்டில் அமல்படுத்த சட்ட ஆணையம் பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக அரசியலமைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற தலைப்பில் சேர்க்கவும் சட்ட ஆணையம் பரிந்துரைக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.
3லிருந்து 6 மாதங்கள் மட்டுமே ஆட்சிக்காலம் மீதமுள்ள மாநிலங்கள் முதல்கட்டமாக இத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும், மற்ற மாநிலங்களை 3 கட்டங்களாக இணைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
5 ஆண்டு முடிவதற்குள் ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தால் அங்குள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைக்க ஆணையம் பரிந்துரை செய்யப்போவதாகவும், ஒருவேளை அது சாத்தியமில்லை என்றபட்சத்தில் தேர்தலை நடத்த சட்டக் குழு பரிந்துரைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.